Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே ராஜாதோப்பு காமாட்சி அம்மன் கோயிலில் நகை, உண்டியல் கொள்ளை போலீஸ் தீவிர விசாரணை.


காரிமங்கலம் அருகே காமாட்சி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 


காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜாதோப்பு பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது, நேற்று காலை கோயில் வழியாக சென்றவர்கள், கோயிலின் கதவு திறந் திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மற்றும் குத்துவிளக்குகள், பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது.


இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார், கோயிலில் பாதுகாப்புக்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி இருந்தது, இதுகுறித்து இன்று வழக்குபதிவு செய்த காரிமங்கலம் போலீசார் கொள்ளையில் ஈடுபட்  மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies