பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு பள்ளியில் அகில உலக தமிழ் முழக்க களம் சார்பில் தாய்த் தமிழ் திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 நவம்பர், 2023

பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு பள்ளியில் அகில உலக தமிழ் முழக்க களம் சார்பில் தாய்த் தமிழ் திருவிழா.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி அரசு மேல்நிலைபள்ளியில் அகில உலக தமிழ் முழக்க களம் சார்பில் தாய்த் தமிழ் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி சங்கர். பீனிக்ஸ் குழு நிவனர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த  அகில உலக தமிழ் முழக்க களம் நிறுவன நிர்வாகி மாலினி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே இயற்கை சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அதிக அளவில் மரங்களை நட வேண்டும், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். மூலிகை மரங்களை பாதுகாத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும் என பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், இயற்கை ஆர்வலர்கள் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தருமபுரியில் மெகா கல்யாண கண்காட்சி 2024, பந்தல் முதல் பந்தி வரை ஒரே இடத்தில், வரும் மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், நமது தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களின் திருமணத்தை மேலும் சிறப்பாக்க வருகைதாருங்கள்..