Type Here to Get Search Results !

காரிமங்கலம் வார சந்தையில் 75 இலட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை மற்றும் கால்நடை சந்தை நடப்பது வழக்கம். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 

14 ம் தேதி நடந்த கால்நடை சந்தையில் சுமார் 450 ஆடுகளும்.150  மாடுகளும்  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது, இதில் ஆடு ஒன்று  8000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது, மொத்தம் 50 இலட்சம்  ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது, இதேபோல் மாடு ஒன்று  25 ஆயிரம் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. 


இதில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. நாட்டுக்கோழிகள் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 75 இலட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் வர்த்தகம் நடைப்பெற்றது. தீபாவளியை தொடர்ந்து  கால்நடை வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies