கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2023 மாவட்ட அளவிலான விழா பருவதனஹள்ளி புதூரில் உள்ள மல்லிகை மஹாலில் இன்று பிற்பகல் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2023 மாவட்ட அளவிலான விழா பருவதனஹள்ளி புதூரில் உள்ள மல்லிகை மஹாலில் இன்று பிற்பகல் நடைபெற்றது.


கூட்டுறவு வார விழாவானது. அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14ந் தேதி ஆரம்பித்து நவம்பர் 20ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதனஹள்ளி புதூரில் நடைபெற்ற 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2023 மாவட்ட அளவிலான விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கே.சாந்தி அவர்கள் விழா பேருரையாற்றி,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினார். தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான தடங்கம் சுப்பிரமணி,பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad