தருமபுரியில் 56தேசிய வார நூலக வார விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

தருமபுரியில் 56தேசிய வார நூலக வார விழா.


தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 56 வது தேசிய நூலக வாரவிழா – 2023 கடந்த 19.11.2023 பிற்பகல் 3.00 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் திரு. இரா.மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் அவர்கள் நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி நூல் கண்காட்சியை திறந்து வைத்தார்.  

போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகத்தை நன்முறையில் பயன்படுத்தி உயரிய அரசுப் பணிகளில் இடம்பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  இவ்விழாவில் இரண்டாம் நிலை நூலகர் திரு.ந.ஆ.சுப்ரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  தலைமை ஆசிரியர் திரு.மா.பழனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் நூலகங்களுக்கு சென்று வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி சிறந்த அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெ.முனிராஜ் அவர்கள் மற்றும் திரு.க.சி.தமிழ்தாசன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.  விழாவின் நிறைவாக மூன்றம் நிலை நூலகர் திரு.என்.பி.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad