தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பெல்ரம்பட்டி காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியபெருமாள் (40) இவரது தாய் புஷ்பா அவரது பெயரில் இருந்த 6 ஏக்கர் நிலத்தை தனது பெரிய மகன் பெரியபெருமாளுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இதனை எதிர்த்து இவரது தம்பி ராமமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தெடர்ந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர். பெரிய பெருமாளின் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள், உணவு தாணியங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக மாராண்டஅள்ளி காவல் நிலையத்தில் பெரிய பெருமாள் புகார் அளித்தார் புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் இராமமூர்த்தி (வயது.37), அவரது மனைவி இரம்யா (வயது.33), மாமனார் சின்னசாமி (வயது. 47) மாமியார் சாந்தி (வயது. 45) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

