தருமபுரி மாவட்டத்தில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 600 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்க்கொள்ள மொத்தம் 3 இலட்சத்து 56 ஆயிரம் டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் நவம்பர் 6ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இவ்வாய்ப்பினை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்தி 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

