தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.11.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.