இவருக்கு மனைவி ஒரு மகன் உள்ளதாகவும், மனைவியும், மகனும் பெங்களூரில் உள்ளதாகவும், தான் மட்டும் சமத்துவபுரத்தில் தனியாக வசித்துக்கொண்டு ஜோதிடம் பார்த்து வருவதாக தெரிவிக்கும் ராமகிருஷ்ணன், தங்களுக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலம் குட்டூர் கிராமத்தில் இருந்து வருவதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு அபகரிக்க முயன்று வருவதாகவும், வயளில் பணி செய்து கொண்டிருந்த தன்னை குறிப்பிட்ட சிலர் சரமாரியாக தாக்கியதில் காயம்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நியைில், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காரிமங்கலம் காவல்துறையில் புகாரிளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி நகர போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ராமகிருஷ்ணனை மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஒற்றை ஆளாய் ஜோதிடர் ஒருவர் திடிரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

