தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி பாரதிபுரத்தில் இயங்கி வரும் கிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் குமார் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

