தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திம்மம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-24 ஆம் ஆண்டிற்க்கான அரவை வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. கரும்பு பதிவு செய்துள்ள அங்கத்தினர்களின் பட்டியல், கோட்டம் மற்றும் வயல் வாரியாகவும் மற்றும் கரும்பு வெட்டும் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில் ஆலை வரையறைக்குள் கரும்பு நடவு செய்து, இதுநாள் வரையில் ஆலை அரவைக்கு பதிவு செய்யாமல் இருக்கும் அங்கத்தினர்கள் மற்றும் விவசாயிகள் வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள், தங்களது பகுதி கோட்ட கரும்பு அலுவலர்கள் மற்றும் கரும்பு உதவியாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதே சமயம் ஆலை அரவை தொடங்கிய பின் பதிவு செய்ய விருப்பம் தெரிவிக்கும் அங்கத்தினர்களின் கரும்புக்கு, 2023-24 ம் ஆண்டு அரவைக்கு ஒன்றிய அரசால் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதாய விலையை விட குறைவாக வழங்கப்படும்.
மேலும் மாநில அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகையும் வழங்க இயலாது. என தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் யோகவிஷ்ணு அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

