தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரிமங்கலம் பஸ் நிலையம் பின்பு உள்ள பெட்டி கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சந்தோஷ் (வயது. 31 ) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது, அதே போன்று மாட்லாம்பட்டியில் வீட்டில் வைத்து மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது அவரை பிடித்து விசாரித்ததில் கணேசன் (வயது .30) என்பதும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த காரிமங்கலம் போலீசார் அவர்கள் இருவரிடமிருந்தும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 30 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.