Type Here to Get Search Results !

பாலக்கோடு எர்ரனஅள்ளியில் பாஜக புதிய கிளை திறப்பு விழா, மாவட்ட தலைவர் கொடியேற்றி துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த  எர்ரனஅள்ளியில் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் புதிய கிளை தொடக்க விழா ஒன்றிய பொதுசெயலாளர் பெரியண்ணன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொருளாளர் மாதையன், ஒன்றிய தலைவர் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி கிளை கழகத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வேட்டி.சேலை வழங்கினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா, மாவட்ட துணைத் தலைவர் பாடி முரளி, பாலக்கோடு நகர தலைவர் வேலு, மற்றும் நிர்வாகிகள் காவேரி வர்மன், கோபால், ராஜேந்திரன், சேட்ட, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies