Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு பணிமனை முன்பு பி.ஜே.பி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் தேசிய தொழிலாளர் தின விழா கொண்டாடபட்டது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிவனை முன்பு பாஜக சார்பில்   பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது  பிறந்த நாள் விழா மற்றும்  தேசிய தொழிலாளர் தின விழா கோட்டபொறியாளர் சின்னதுரை தலைமையில் கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு  மாநில பொருளாளர் ஞானசேகரன், மண்டல பொது செயலாளர் மாது ஆகியோர்  முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளாரக பாஜக  மாவட்ட தலைவர் பாஸ்கர்  கலந்து கொண்டு கட்சி  கொடி ஏற்றினார்.


அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஞானபிள்ளையார் கோவிலில்  பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முணிட்டு  சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட  துணை தலைவர் பி.கே.சிவா, மாவட்ட செயல் தலைவர் பழனிச்சாமி, டிப்போ தலைவர் மாதையன், செயலாளர் முனியப்பன், பொருளாளர் சக்திவேல் மற்றும் கோபி,பூவரசன்,கருணாகரன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் தொழிலாளர்கள் திராளக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies