காரிமங்கலம் அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

காரிமங்கலம் அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் ஜக்க சமுத்திரம் ஊராட்சியில்  பொம்மனுர் கிராமத்தில் அதிமுக கிளை கழகம் சார்பில் பொம்மனுர் 67வது  பூத் கமிட்டியில் இளைஞர் பாசறை , இளம் பெண்கள் பாசறை, கழக மகளிர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைப்பெற்றது.


வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற தேர்தல் வியூகம் வகுத்து பூத் கமிட்டி மூலம் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய சங்க தலைவர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், கிளை செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் பால்வள தலைவர் முருகன், ஒன்றிய பாசறை தலைவர் பரமானந்தம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தருமபுரியில் மெகா கல்யாண கண்காட்சி 2024, பந்தல் முதல் பந்தி வரை ஒரே இடத்தில், வரும் மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், நமது தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களின் திருமணத்தை மேலும் சிறப்பாக்க வருகைதாருங்கள்..