Type Here to Get Search Results !

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


காரிமங்கலம் திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டத்திற்க்கு வரும் 26ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார்.


அது குறித்து  பாலக்கோடு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்களின் தலைமையில் திமுக மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகைக்காக மேற்கொள்ளப்பட உள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் . குறித்து ஆலோசிக்கப்பட்டது.காரிமங்கலம் பேரூர் செயலாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.


நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கில் ஆ.மணி, ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் கிருஷ்ணன், அடிலம் அன்பழகன், எம்.வீ .டி.கோபால், பி.கே.அன்பழகன், எஸ்.முனியப்பன், பேரூர் கழக செயலாளர்கள் பி.கே.முரளி, எம்.ஏ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர்.மனோகரன். மற்றும் மாநில, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies