Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகில் உள்ள மேக்லாம்பட்டி ஏரியில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துத்துள்ள மேக்லாம்பட்டி ஏரியில் பாலக்கோடு தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நீரில் மூழ்கியவர்களை  காப்பாற்றுவது,  மழை காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்ற செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் அவர்களில் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆறு, ஏரி, குட்டை, கிணறுகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது.மேலும் மழை, வெள்ளம் போன்ற நேரங்களில் எவ்வாறு எச்சரிக்கையாக செயல்படுவது ஆகியன குறித்தும் தண்ணீரில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதும் குறித்தும் தீயனைப்பு வீரர்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்து காட்டினார்.


இந் நிகழ்ச்சியில் கரகத அள்ளி பஞ்சாயத்து தலைவர்,  மற்றும் மேக்கலாம்பட்டி ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies