தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் எனக்கு இரண்டு மாடுகள் கட்டும் அளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டது அதன் அடிப்படையில் 25 கிலோ தரமற்ற பைப்புகள் 4 தகர சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சுமார் 16 ஆயிரம் ரூபாய் செலவில் பெயரளவிற்கு கொட்டகை அமைத்துள்ளனர்.
பலத்த காற்று அடித்தால் கொட்டகை காற்றில் பறந்து சென்று விழுந்து விடும் போல் உள்ளன அந்த கொட்டகையில் மாடுகளை கட்டுவதற்கு அச்சமாக உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாட்டுக் கொட்டகையை மாற்றித் தர வேண்டும் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் அவர்கள் மாட்டு கொட்டகையை ஆய்வு செய்து தரமான மாட்டு கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனதில் கூறப்பட்டுள்ளது.
.gif)

