Type Here to Get Search Results !

பாலக்கோடு, ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வரவேற்பு விழா.


பாலக்கோடு மல்லுப்பட்டியில் உள்ள  மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை மற்றும் இளங்கலை  மாணவிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்  முருகேசன் வரவேற்றுப் பேசினார். 

இவ்விழாவில்  கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை.ஜி மூத்த மாணவிகள்  முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளை இன் முகத்தோடும் சகோதரத்துடன் வரவேற்பதை  அவர்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த உணர்வைப் பார்த்தால் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது மேலும் தமிழர்களின் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக உணர்கிறேன். வளர்ந்து வரும் சமூகத்திற்கு இந்தக் கல்லூரி உங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். படிப்பிலும் வாழ்விலும் மென்மேலும் உயர வேண்டும் என்பதை எண்ணங்களாக  ஒவ்வொரு மாணவிகளின்  மனதில் விதைகளாக விதைக்கிறேன் என்று அனைவரையும் வாழ்த்தி தனது தலைமை உரையில் எடுத்துக் கூறினார். 

மேலும் வாழ்த்துரையாக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்  உதயகுமார் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக நடைபெறுவதைப் பார்த்தால் இது தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதை உணர்கிறேன். இது மேலும் மாணவிகளின் உற்சாகத்தைப் பார்க்கும் பொழுது அவர்களின் கற்றல் திறன் வளர்ச்சிக்கும் இவை உறுதுணையாக இருக்கும். நமது முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை மையப்படுத்தி வருடந்தோறும் மாணவிகளின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தவாறு  கல்வியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதையை வழி வகுக்க வேண்டும். 

இது நமது தாளாளர் அவர்களின் மிகுந்த  கனவாகும். மாணவிகள் அனைவரும் உங்களின் அறிவுசார் படிப்பு வளர்ச்சி மென்மேலும் வளரவேண்டும் என்பதை தனது வாழ்த்துரையாகக்  கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் த. இரகுநாதன் அவர்கள் முதலாமாண்டு மாணவிகளின்  வரவேற்பு விழா எதிர்வரும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக  அமைகிறது. அனைத்து மாணவர்களின் உற்ச்சாகத்தைப் பார்த்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே போல் தங்களின் படிப்பு காலம் முடியும் வரை இருக்க வேண்டும். 

மகிழ்ச்சி மட்டும் போதாது உங்களை எவ்வாறு நம்பிக்கையோடு தங்களின் பெற்றோர்கள் ஸ்ரீ மூகாம்பிகை கல்லூரியைத் தேர்ந்தெடுத்து சேர்த்துள்ளார்களோ அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இது இந்த கல்லூரிக்குப் பெருமை. என்ற உணர்வை எல்லோர் மனதிலும் பதிய  வேண்டும். மேலும் மாணவிகளை ஊக்கப்படுத்தியும், பெருமைப்படுத்தும் வகையில் வாழ்த்திக் கூறினார். கல்லூரியில் 15 துறைகள் உள்ளன. அதில் மூத்த மாணவிகள் தங்களின் முதலாம் ஆண்டு மாணவிகளை இனிப்பு மற்றும் கார வகைகள் கொடுத்து மகிழ்ச்சி ப்படுத்தியும் மாணவிகளுக்கு பல்வேறு வகையான விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியை அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இந் நிகழ்ச்சியில் 2200 மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்தி அனைவருக்கும் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies