Type Here to Get Search Results !

அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மீது காவல்துறையில் புகார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மீது காவல்துறையில் புகார், பொதுக் கூட்ட மேடை ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.


தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேடு பகுதியில் கடந்த 16 ம் தேதி பொதுக்கூட்ட மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு க ஸ்டாலின் அவர்களையும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் விமர்சித்தும் வீண் வதந்திகளை பரப்பியும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் என்பது புகாராகும்.


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தொ .சந்திரசேகரன் தலைமையில், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே. பி அன்பழகன் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்க வேண்டுமென புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies