Type Here to Get Search Results !

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (01.09.2023) நடைபெற்றது.

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி, நகராட்சி, மகளிர் திட்டம், கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, தொழிலாளர் நலத்துறை, இரயில்வே துறை உள்ளிட்ட துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் நகராட்சி, வட்டாரம், நகர பஞ்சாயத்து, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்துதல், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, பள்ளி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 1098 குழந்தை உதவி எண் (சைல்டு ஹெல்ப் லைன்) அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


மேலும், குழந்தைத்திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குறும்படம், துண்டு பிரசுரம் தயாரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் விகிதாச்சாரம் குறித்த புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல், இளஞ்சிறார் நீதிச்சட்டத்தின்கீழ் குழந்தைகள் இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் குழந்தை இல்லங்களை கண்காணிப்பு செய்தல், இதுகுறித்த பல்வேறு துறை அலுவலர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு குழந்தைகளுக்கான பிரத்யேக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், கிராமங்களில் பொது மக்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், வட்டாரங்களில் பயிற்சி பட்டறைகள் நடத்துதல், இல்லங்களில் ஊட்டச்சத்து தோட்டத்தினை உருவாக்குதல் மற்றும் மாணவ/மாணவிகளுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், வாழ்வியல் வழிகாட்டு நிகழ்ச்சிகள், வாசிப்பு முகாம்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.


இக்கூட்டத்தில் இளஞ்சிறார் நீதிக்குழும நடுவர் திரு.ஏ.பிரபு, கூடுதல் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோ, குழந்தை நலக்குழு உறுப்பினர் திருமதி.சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு..ஆ.செல்வம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies