இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தினமலர் நாளிதழை தீட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அரூரில் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் முன்னிலையில் கச்சேரிமேட்டில் அண்ணா சிலை முன்பு திமுகவினர் தினமலர் நாளிதழை எரித்தனர். அப்போது தினமலர் நாளிதழுக்கு எதிராக திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை விமர்சித்து சர்ச்சைக்கு உரிய வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தடை செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் தினமலர் நாளிதழை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தமிழழகன் கோட்டிஸ்வரன் நா.முருகேசன் திருவேங்கடம் முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு நகர நிர்வாகிகள் செல்வதயாளன் கணேசன் மோகன் மாதேஷ் ஆதம் ஜோதி சென்னகிருஷ்ணன் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

