மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (01.09.2023) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 1485 வாக்குச்சாவடிகளும், 878 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 12,26,685 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2024 தொடர்பாக புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 21.08.2023 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முன்னிலையில் வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குசாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பான கோரிக்கைகளை 21.08.2023 முதல் 27.08.2023 வரை வழங்க தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள்,துணை வட்டாட்சியர்கள் மேற்கொண்ட களஆய்வின் அடிப்படையிலும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1485 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்பொழுது காரிமங்கலம், அரூர் வட்டங்களில் தலா ஒரு புதிய பாகமும், நல்லம்பள்ளி வட்டத்தில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள்/ புதிய பாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடி மறுசீரமைப்பிற்கு பின்பு 1489 வாக்குசாவடிகள் உள்ளது. வாக்குசாவடி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்களின் வட்ட வாரியான தொகுப்பு
|
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு -2024 |
|||||
|
வ. எண் |
வட்டம் |
புதிய பாகங்கள் உருவாக்குதல் (எண்ணிக்கை) |
பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல் (எண்ணிக்கை) |
கட்டடம் / இட மாற்றம் (எண்ணிக்கை) |
வாக்கு சாவடியின் பெயர் மாற்றம் (எண்ணிக்கை) |
|
1 |
பாலக்கோடு |
0 |
0 |
8 |
1 |
|
2 |
காரிமங்கலம் |
1 |
2 |
6 |
0 |
|
3 |
பென்னாகரம் |
0 |
2 |
57 |
0 |
|
4 |
தருமபுரி |
0 |
6 |
6 |
0 |
|
5 |
நல்லம்பள்ளி |
2 |
2 |
10 |
1 |
|
6 |
பாப்பிரெட்டிப்பட்டி |
0 |
0 |
13 |
0 |
|
7 |
அரூர் |
1 |
0 |
5 |
0 |
|
மொத்தம் |
4 |
12 |
105 |
2 |
|
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக புதுடில்லி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.கீதாராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்), தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ.அசோக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)