விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சியின் பல்வேறு விதமான வழக்குகள் மற்றும் சிறை சென்ற மூத்த நிர்வாகிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்படும் சனநாயகம் வெல்லும் மாநாட்டிற்கு அனைத்து கிராமங்களிலும் சுவர் விளம்பரம் மற்றும் வண்டி வாகனங்கள் தயார்படுத்துதல் கிராமங்கள் தோறும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போடப்பட்டு வரும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக வடக்கு ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
.gif)

