Type Here to Get Search Results !

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்.


இந்து மதத்தையும் சனாதனத தர்மத்தையும் அவதூறாக பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும், உலக இந்து மிசன் அமைப்பினர், தருமபுரி மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.


சென்னையி்ல்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழித்து கட்ட வேண்டும் என பேசியுள்ளதாகவும், அது இந்து மதத்தையும், இந்து மத சனாதன தர்மத்தையும், இந்து மத வாழ்வியல் முறையயும் இழிவு படுத்தும் விதமாக உள்ளது, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து கொண்டு, இப்படி பேசியுள்ளது இந்திய தண்டனை சட்டம் 295 ஏ, ன்படி தண்டனைக்குற்றம் எனவே உதயநிதி ஸ்டாலின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும், எனவும் ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies