தருமபுரி அருகேவுள்ள ஒட்டப்பட்டியில், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசின் .நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மீன்வளத்துறையின் மீன் விற்பனை அங்காடி.
வாரத்தி்ல் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் இந்த விற்பனை அங்காடியில் கடல் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனை செய்யபடுகிறது, அரசின் கீழ் செயல்பட்டு வரும் அங்காடி என்பதால் சரியான விலையில் மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மீன்கள் வாங்கி செல்வதுண்டு.
மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியம் அக்கறையின்மையால் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டிய, அரசுக்கு வருவாய் ஈட்டி தந்திருக்க வேண்டிய இந்த அங்காடி எப்பொழதும் மூடப்பட்டே கிடப்பதால், பகல் மற்றும் இரவு நேரங்களி்ல் மது அருந்தும் பாராக மாற்றப்பட்டிருக்கிறது
அங்காடிக்கு முன் மறைவான டேபிள் போடப்பட்டிருப்பதால், மது அருந்துபவர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி கொடுத்ததுபோல் உள்ளது, இந்த அங்காடிக்கு எதிரிலயே ஒட்டப்பட்டி பேருந்து நிறுத்தம், சிறிது தூரத்திலேயே பள்ளி, அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் என பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணாக்கர்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் இப்படி ஒரு மது அருந்தும் பார் செயல்பட்டு வருவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது.
மீன் விற்பனையை பெருக்கி அரசுக்கு வருமானத்தை ஈட்டி தரவேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மீன் விற்பனை அங்காடி மது அருந்தும் பாராக மாறியிருப்பது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. சம்மந்தபட்ட மீன் வளத்துறை அதிகாரிகளும், தருமபுரி மாவட்ட நிர்வாகமும் இனியாவது இந்த மீன் விற்பனை அங்காடி மீது தனி கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.gif)

