Type Here to Get Search Results !

பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக  பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது  பாலக்கோடு  பஸ் நிலையத்தில் உள்ள மாதையன்  (வயது 56) என்பவரது பெட்டிகடையில்   குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies