Type Here to Get Search Results !

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது - 8120 ரூபாய் பணம் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷிக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து போலீசாருடன்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சிக்கார்தனஅள்ளி பகுதிகளில்  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த இருவரை கைது செய்து விசாரித்ததில்  அப்துல்கரிம் தெருவை சேர்ந்த சுபான் (வயது. 61) சிக்கார்தன அள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது. 56) என்பதும் தெரிய வந்தது.


இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 ஆயிரத்து 120  ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies