Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் 43 பயனாளிகளுக்கு 32.50 இலட்சம் பணம் விடுவிப்பு குறித்த அறிவிப்பு கூட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில்  43 பயனாளிகளுக்கு 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் விடுவிப்பு குறித்த அறிவிப்பு கூட்டம் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு  பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தலைமை வகித்து பேசியதாவது, பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி மத்திய அரசு பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டமான அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்து செய்யப்பட்டு அதில் 43 பயனாளிகளுக்கு 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவரவருடைய வங்கி கணக்கில் நேரடியாக  செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் கட்டிட பணிகளை மேற்கொள்ள 3 தவளைகளாக பணம் செலுத்தப்படும் என்றும் இப்போது முதல் தவணை செலுத்தபட்டுள்ளதாகவும் இதனை பெற்று கட்டிட பணிகளை விரைந்து முடித்து அடுத்தடுத்த தவனைகளை பெற்று கொள்ள அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை கணக்கர் அபுபக்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies