Type Here to Get Search Results !

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மாண விளக்க பொதுக்கூட்டம்.


பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் வகையில் அரூர் கச்சேரிமேடு அருகே அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேடு அருகில் 115வது மற்றும் அதிமுக மதுரை பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் மாபெரும் பொதுக்கூட்டம் அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன், மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோ.சமரசம் மற்றும் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies