அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் இந்த வழியாக எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்ய வேண்டி உள்ளது, எனவே இங்கு உடலை அடக்கம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வேடியப்பன் தரப்பினர் இது காலம் காலமாக எங்களுக்கு சொந்தமான பகுதி அதனால் இவ்வழியாக சாலை அமைக்க விடமாட்டோம் என்றும் மயானத்தில் உடல் அடக்கம் செய்வதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பதாக கூறி, சவ குழிதோண்ட முற்பட்டனர், பிறகு இரு தரப்பினரும் கடும் வாக்குவதில் ஈடுபட்டனர்.
உடனடியாக தகவலறிந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடல் அடக்கம் செய்ய உரிமை உள்ளது எனவும், தெரு சாலை அமைக்க வேண்டும் என்றால் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது, பின்னர் வேடியப்பன் உடல் அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் திடிர் பரபரப்பு ஏற்பட்டது.