தலைமை ஆசிரியர் திருமால் அவர்கள், தன் உரையில் மாணவ சமுதாயம் புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை அறவே ஏறெடுத்தும் பாராமல் படிப்பு ஒன்றே முக்கியம் என்று செயல்பட வேண்டும். தவறான பழக்க, வழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தன் உரையில், புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் நோய்களான வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, ஆண்மை இழப்பு, மூளை செயல் இழப்பு, இருதய குழாய்கள் அடைப்பு, நெடுநாள் நுரையீரல் அடைப்பு நோய்கள், கால் விரல்களில் ஏற்படும் அழுகிய நிலை போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. எனவே தமிழக அரசு இப்புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
மாணவர்கள் இதனை உணர்ந்து கண்டிப்பாக இதனை தவிர்த்திடவும் வீட்டில் யாரேனும் இது போன்ற புகையிலை பொருட்களை உபயோகம் செய்தால் இது குறித்து விழிப்புணர்வு செய்து தவிர்க்க வழிவகை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை தவிர்ப்போம்! தடுப்போம்!! புற்றுநோய் வராமல் காப்போம்!!! மேலும் புகையிலை இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். இயற்பியல் ஆசிரியர் திரு.சங்கரன் நன்றி உரையாற்றினார் .
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பெரியாம்பட்டி மற்றும் மாட்லாம்பட்டி பகுதிகளில், பள்ளி அருகில் மற்றும் பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.