பென்னாகரம் சின்ன வத்தலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கவேண்டும், துணை பதிவாளரை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகேவுள்ள த.பி. டி 17 சின்ன வத்தலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சில தினங்களுக்கு முன்பு முறைகேடாக நியமிக்கப்பட்ட கலையரசன் என்பவரை நீக்கி விட்டு அதே சங்கத்தில் நீண்ட வருடங்களாய் பரிசோதகராக பணியாற்றி வரும் அனுவபம் வாய்நத பாஸ்கர் என்பவரை புதிய செயலாளராக நியமிக்கவேண்டும் என பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள், ஊர் பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்து உடனடியாக ஒரு மனதாக தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என துணை பதிவாளரை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து துணை பதிவாளர் மற்றும் சரக முதுநிலை ஆய்வாளர் கவின் ஆகியோர் முன்னிலையில் பாஸ்கரை புதிய செயலாளராக நியமித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டது பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கிராம மக்கள் வரவேற்றுள்ளனர்.
.gif)

