Type Here to Get Search Results !

பாலக்கோடு நகர பிரிவுசாலை பகுதிகளில் தொடர் விபத்துகள் அதிகரிப்பு- காவல்துறை பேரிகார்டு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கும் பாலக்கோடு நகரம் பிரதானமாக மையமாக  உள்ளது. 

தற்போது பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புறவழிச்சாலை பகுதியில்  அரசு மகளிர் பள்ளி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சாலையை கடக்கும் சூழலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டடு வருகிறது.

தக்காளி மார்க்கெட் பிரிவு சாலை, எம்.ஜி.ரோடு பிரிவு சாலை, ஓசூர் புறவழிச்சாலை பிரிவு, பாப்பாரப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளை தடுக்க காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா மற்றும் தடுப்பு (பேரிகார்டு) உள்ளிடவை வைக்கப்பட்டிருந்தன, தற்போது அனைத்து பேரி கார்டுகளும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருவதால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்படுத்தி வருகின்றன, இதனால்  பொதுமக்கள்  மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவர்களின் உயிருடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து தெரிந்தும் காவல்துறை உயர் அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதால், தமிழக முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies