Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கழிவு செய்யப்பட்ட அரசு வாகனம் பொது ஏலம், விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

*மாதிரி படம்.

தருமபுரி மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் எண். TN 07 G 2126 (வாகன மாதிரி: 2001) என்கிற Mahindra & Mahindra Jeep கழிவு செய்யப்பட்டதையடுத்து, கழிவு செய்யப்பட்ட மேற்படி வாகனம் வருகின்ற 3.10.2023 அன்று முற்பகல் 11.00 மணியளவில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. 

மேற்படி ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு விலைப்புள்ளியைக் கோரலாம்.

நிபந்தனைகள்

  1. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையில் 10%  முன்பிணைத்தொகை வரைவோலையாக Assistant Director of Survey and Land Records, Dharmapuri அவர்களுக்கு செலுத்த வேண்டும்.
  2. குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  3. ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்.
  4. அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும்.
  5. ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளினை எடுத்து செல்ல வேண்டும்.
  6. ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படாது.
  7. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.
  8. இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கோ ஏலத்தை நிறுத்தி வைக்க, ஏலத்தை முடித்து வைப்பதற்கு துறை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.
  9. ஏலம் எடுப்பவர் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படையில் GST, CST தொகையினை ஏலம் எடுப்பவர்களே செலுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies