Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் மொத்த விற்பனையை கண்டு கொள்ளாமல் பெயர் அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரூராட்சி அலுவலர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டவை என எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக பொதுமக்கள் மத்தியில் அதிக புழக்கத்தில் உள்ளது.


தமிழக முழுவதும் 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


ஆனால் பாலக்கோடு பேரூராட்சியில் 10 மேற்பட்ட பெரிய குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தண்ணீர் டம்ளர், தட்டு போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 


பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் பெயரளவில் மட்டுமே வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகளிடம் சொற்ப அளவில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து கடும்  நடவடிக்கை எடுப்பது போல் பாவ்லா செய்து வருகின்றனர். 


ஆனால்  குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, விழிப்புணர்வு என்ற பெயரில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விளம்பரத்திற்காக பேரூராட்சி அலுவலர்கள்  நிகழ்ச்சிகளை நடத்தி வரு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies