Type Here to Get Search Results !

பாலக்கோடு ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் , தாபாக்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தமிழ்நாடு, மாநில உணவு பாதுகாப்பு துறை  ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுதும் உள்ள நெடுஞ்சாலை, ஹைவே, பைபாஸ் சாலைகளில் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள்  மற்றும் உணவகங்கள்,  சாலை ஓர துரித உணவகங்களில்  ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் வழிகாட்டல் படி பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சுகர்மில், மாதம்பட்டி, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி மகேந்திரமங்கலம் மற்றும் ஜிட்டான்டள்ளி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், சாலை ஓர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தார்.  


ஆய்வில் உணவகங்களில் உரிய சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா, உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, மூலப் பொருட்கள் உரிய காலாவதி தேதி உள்ளனவா  மேலும் சட்டினி, தயிர், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் தரமாகவும், குடிநீர் விநியோகம், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் தேயிலை தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.


சுமார் 25க்கும் மேற்பட்ட உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகள் ஆய்வு செய்ததில் இரண்டு உணவகங்களில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 3லிட்டர், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள், இரண்டு உணவகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள்  மற்றும்  ஒரு மளிகை கடை மற்றும் பேக்கரியில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட  வறுத்த பச்சை பட்டாணி 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. நியமன அலுவலர் அறிவுறுத்தல்படி நான்கு கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் வீதம் நான்கு ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 


மேலும் ஜிட்டான்டள்ளியில் ஒரு பெட்டி டீக்கடையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து மேற்படி கடைக்காரருக்கு ரூபாய் ஐந்தாயிரம் உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ்  வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத உணவகங்களுக்கு உடனடியாக உரிமம் பெற வழிவகை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 


தொடர்ச்சியாக பாலக்கோடு மற்றும் காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் ஆய்வு தொடரும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies