Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் அஞ்சல் துறை சிறப்பு முகாம் மற்றும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா இன்று நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் பாலக்கோடு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் மற்றும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா பாலக்கோடு அஞ்சல் அலுவலக துணை அலுவலர் அருன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் அன்புமணி முன்னிலை வகித்தார். இம்முகாமில்  அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தபட்டு வரும் காப்பீடு திட்டங்கள்,  அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பாக செயல்படுத்தபட்டு வரும் செல்வமகள், பொன்மகள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்தும், மேலும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் வருவாய்  அதிகாரிகள், அன்னாதொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகம், உதவி தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies