Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் திமுகவினர் தினமலர் நாளிதழ் எரிப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மடம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூர் கழக செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். 


இதில் தர்மபுரி மாவட்டம் முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் காளியப்பன், பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், மாவட்ட கழகப் பிரதி சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகன், சீனிவாசன், பூக்கடை முனியப்பன், பிரதீப், பி ஆர் மதையன், கே இ சேகர், விஜய் முனுசாமி, விஜய பாலாஜி, சங்கரன், மாதையன், நந்தன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பச்சையப்பன், வெங்கடேசன், ஜானு பவுனேசன், முரளி, இர்பான் உட்பட ஏராளமான திமுகவினர்கள் கலந்துகொண்டு தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து கோசங்கள் எழுப்பியும் நாளிதழ் பேப்பரை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.Aaa

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies