தருமபுரி மாவட்டம் பாலக்கோடு , காரிமங்கலம், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுரேஷ் ஓகேனக்கல் இன்ஸ்பெக்டராகவும், ஒகேனக்கல்லில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராகவும், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மேச்சேரி காவல் நிலையத்திற்க்கும், பாகலுர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் காரிமங்கலம் காவல் நிலையத்த்திற்க்கும் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இடமாற்றம் நிர்வாக காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளதாக சேலம் டிஜஜி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.