தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக பேரூர் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 - வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பேரூர் கழக செயலாளாரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் இதயாத்துல்லா, ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம், மத்திய ஒன்றிய துணை செயலாளர் ரவி, கவுன்சிலர்கள் மோகன், சரவணன், ராஜலட்சுமி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், கிளை செயலாளர் ராஜீ, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் / கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.