தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், நார்த்தம்பட்டி ஊராட்சி, மேட்ச் பேக்டரி முதல் கொட்டம்பட்டி வரை முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தல் மற்றும் தம்மணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில், பள்ளிக்கு டெஸ்க்,பென்ச் வழங்குதல், கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல்நாட்டி பணியை தொடங்கி வைத்தல், அதனை தொடர்ந்து, சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, ஈஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராம விளையாட்டு திருவிழாவில் பங்கேற்று, வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிகளில், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாது, ஜெயக்குமார், தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர் ஆ.அன்புகார்த்திக், ஒன்றிய தலைவர் வடிவேல், மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர் தமிழரசன், கட்சியின் முன்னோடி ராஜா, பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.