கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன்-NGO சார்பில்., போக்குவரத்து வசதி இல்லாத மலைக்கிராமமான தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அலக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தகடூர் தமிழரசன் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் டி.எஸ்.சசிகுமார், முதன்மை இயக்குனர் பொம்மிடி முருகேசன், திட்ட இயக்குனர் அன்பரசு ராமன், அதியன் அவ்வை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் துரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.
மேலும், பள்ளிக்கு முதல் புரவலர் நிதியும் வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக வனப்பகுதியில் மரச்செடிகள் நடப்பட்டது. இறுதியில், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பசுவராஜ் நன்றி கூறினார்.