தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கூத்தப்பாடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77வது சுதந்திர தின விழா நேற்று நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக ந. தேவகி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.