கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைப் பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகம். இவ் அலுவலகம் மூலம் பல்வேறு வகையான சுய தொழில் பயிற்சிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர்க்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.
இப்பயிற்சி மைய அலுவலகம் இந்தியன் வங்கியின் நிதிஉதவியுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் 10 நாட்களுக்கான காளான் வளர்த்தல் பயிற்சி துவங்குவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் :- 21.08.2023/திங்கட்கிழமை பயிற்சி நேரம் :- காலை 9:30 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஆகும்.
இதற்கு விண்ணப்பிக்க கே.ஆர்.பி. அணைப்பகுதியில் அமைந்துள்ள இப்பயிற்சி நிறுவன அலுவலகத்தினை அனுகவும். மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு 9080676557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு ஆகும் பயிற்சி நிறைவில் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.