Type Here to Get Search Results !

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் தருமபுரி MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  ஒன்றியம், ஜருகு அரசு மேல்நிலைப்பள்ளி தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தருமபுரி நகராட்சி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் அந்தந்த பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வுகளில், ஜருகு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ், நகராட்சி சேர்மேன் லட்சுமிநாட்டான்மாது, பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், ஒன்றிய செயலாளர் இராஜீவ்காந்தி, நகர செயலாளர் கி.வெங்கடேசன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் இரா.கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு வெங்கடாசலம், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கலீம், ஒன்றிய கவுன்சிலர் இராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் - அன்பழகன், உத்திரகுமாரி, நிர்வாகிகள் ராஜா, கருணாகரன், ஜெயபிரகாஷ், கிரி, அருள், சாணவாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies