மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி.


மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, 160 பேர் பங்கேற்பு தர்மபுரியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி  நடந்தது. போட்டிகளை நந்து ஸ்போர்ட்ஸ் அகடாமி தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.


போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது, 20 முதல் 35 வயது, 35 வயதுக்கு மேல் என 8 பிரிவுகளின் கீழ் நடந்தது. இதில் தர்மபுரி, சேலம், திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 160 பேர் பங்கேற்றனர். 


இதில் ஒவ்வொரு வயது பிரிவிலும், முதல் 3 இடங்களை வென்ற வர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கொண்டனர். இதில் துணை தலைவர் பெப்சி வெங்கடேசன், செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad