தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நாகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க நிகழ்வு செங்கன்னூர் ஊராட்சியின் 5 வது வார்டு உறுப்பினர் சண்முகப்பிரியா சீனிவாசன் முன்னிலையில் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் காலை சிற்றுண்டி திட்டத்தின் நோக்கம் மற்றும் சிறப்புகள் பற்றி கூறினார். கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் கற்றலில் ஆர்வத்தோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக கிளை செயலாளர் ராஜீ, நரசிம்மன் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சமையலர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.