மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர்கள் மாதப்பன், சதீஷ், முனிவேல், சிவகுரு, மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் சந்தோஷ், தேவராஜ் சபரிகார்த்திகேயன், சந்தோஷ், பிரபு ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் துரை.சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், பசுமைத்தாயக மாநில துணைச் செயலாளர் மாது, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பாமக இளைஞர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் தகடூர் தமிழன், மற்றும் சுப்பிரமணி, தேவேந்திரன், சேகர், காமராஜ், மனோகரன், பாலாஜி, அன்பழகன், முத்துவேல், பெருமாள், சித்துராஜ், வாசு நாயுடு, சங்கர், சத்ரிய பிரபாகரன், பாலசந்தர், சக்தி, கார்த்திகேயன், மகாலிங்கம், வேல்முருகன், பாலமுரளி, தங்கராஜ், மகேந்திரன் மற்றும் இளைஞர் சங்க ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தின் இறுதியில், மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.