சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா பென்னாகரம் சமூக முன்னேற்ற சங்கத்தின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பொன்முடி மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு மற்றும் மருத்துவர் முனிராசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ரங்கராஜ் அவர்கள் பணி நிறைவு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மற்றும் ந. குழந்தைவேல், சக்திவேல், சந்திரகுமார், கோனப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இறுதியாக பொன்முடி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.